Ticker

10/recent/ticker-posts

Google Tips: ஒருவரின் புகைப்படத்தை வைத்து அவரின் பெயரை கண்டுபிடிப்பது எப்படி?

 


அனுதினமும் Google Search செய்யும் பலருக்கும் தெரியாத ஒரு தந்திரம் உள்ளது என்றால் அது கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் ஆகும்.



வலைத்தேடல் எனப்படும் வெப் சேர்ச் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது, ஏனெனில் இந்த கிரகத்தில் உள்ள எந்தவொரு தகவலையும் கண் சிமிட்டும் நேரத்திற்குள் அணுக இது உதவுகிறது.

நீங்கள் எதைப்பற்றி தேட விரும்புகிறீர்களோ அதை பற்றி உங்களுக்கு தெரிந்த சில பிரதான வார்த்தைகளை கூகுள் சேர்ச்சில் டைப் செய்தால் போதும், குறிப்பிட்ட விட்டதாம் சார்ந்த அத்துணை தகவல்களும் உங்களுக்கு அணுக கிடைக்கும் அப்படித்தானே?

ஒருவேளை நீங்கள் தேட விரும்புவதை உங்களால் டைப் செய்வதின் வழியாக விவரிக்க முடியாவிட்டால் என்ன செய்வது? உதாரணமாக, நீங்கள் ஒரு பெயர் தெரியாத விலங்கைத் தேடுகிறீர்களானால், அதன் உருவம் மட்டுமே உங்களிடம் உள்ளது என்றால்?அதன் பெயரை கண்டுபிடிப்பது எப்படி?

இந்த இடத்தில் தான் கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடல் உங்களுக்கு கைகொடுக்கும். அதாவது உங்களிடம் இருக்கும் படத்தை வைத்து உங்களுக்கு தேவையான தகவலைத் தேடலாம். அதெப்படி? 
என்பதை விளக்கும் எளிமையான வழிமுறைகள் இதோ:

வழிமுறை 01:

உங்கள் வெப் ப்ரவுஸரை துவக்கி, கூகுள் தேடலுக்குள் (Google search) நுழையவும். பின்னர் மேல் வலது மூலையில் உள்ள 'இமேஜேஸ்' 
எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை 02:

இப்போது உங்கள் ப்ரவுஸர் refresh ஆகும். பின்னர் Search bar இல் Camera ஐகான் ஒன்று காட்சிப்படும், அதை கிளிக் செய்ய அந்த கேமரா ஐகான் ஆனது Images வாயிலான search தொடங்கும்.


எக்காரணத்தை கொண்டும் "இதையெல்லாம்" கூகுளில் தேட வேண்டாம்; மீறினால் நாங்க பொறுப்பில்லை!

வழிமுறை 03:

இப்போது உங்களுக்கு ஒரு Menu காட்சிப்படும் அதில் நீங்கள் விவரம் அறிய விரும்பும் இமேஜின் URL-ஐ பேஸ்ட் செய்யலாம் அல்லது உங்கள் டிவைஸ் வழியாக குறிப்பிட்ட இமேஜை அப்லோட் செய்யலாம். உங்களுக்கு பொருத்தமானதே தேர்வு செய்து கொள்ளவும்.

வழிமுறை 04:

இப்போது Enter-ஐ அழுத்தவும். நீங்கள் பதிவேற்றிய படத்தைப் 
பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு காட்சிப்படும். 
உடன் அந்த இமேஜின் சைஸ் மற்றும் தோற்றம் உள்ளிட்ட விவரங்களும் காண்பிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட 
இமேஜ் தொடர்புடைய பொருட்களின் படங்களும் 
காண்பிக்கப்படும்.

இதே முறையிலான இமேஜ் தேடலை உங்கள் ஸ்மார்ட்போன் வழியாகவும் நிகழ்த்தலாம். அதை செய்ய உங்கள் ஸ்மார்ட்போன் ப்ரவுஸரில் உள்ள Desktop site முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments