Ticker

10/recent/ticker-posts

சென்னையில் பேய் வசிக்கும் இடங்கள்! -Top 6 Most Haunted Place In chennai



No:1  டிமாண்டி காலனி



இது ஒரு வீடல்ல. பெயரைப் போலவே பல வீடுகள் கொண்ட காலனி. வாட்ச்மேன், தெரு நாய்கள் தவிர யாரும் இல்லை. இருந்தவர்களும் காணாமல் போய்விட்டார்கள் என்கிறார்கள். டிமாண்டி காலனி படம் வந்த பிறகு பலர் இங்கு வந்து பார்க்க ப்ரியப்படுகிறார்கள். அதனால், காவல்துறை இங்கு ஒரு எச்சரிக்கை பலகையே வைத்துவிட்டது. இப்போது இங்கிருக்கும் வீடுகளை இடித்து விட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வரலாம். அப்போது இந்த இடத்தின் பேய் பயம் போய்விடும்.

No:2 உடைந்த பாலம் - பெசன்ட் நகர்



எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இரண்டு கி.மீ இந்தப் பாலம். செல்லும் வழியெங்கும் சேறு, குப்பைகள், சரியான சாலை வேறு கிடையாது. இதையெல்லாம் தாண்டி சென்றால் இந்தப் பாலத்தை அடையலாம். பகல் நேரத்தில் இளைஞர்கள் செல்ஃபி எடுக்க வருவார்கள். இருட்டும் முன் ஓடிவிடுவாரக்ள். இரவு நேரத்தில் ஒலங்கள் கேட்பதாக இங்கு வந்தவர்கள் சொல்கிறார்கள். பல படங்களில் இந்த இடம் வந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

No:3 கரிக்கட்டு குப்பம்




இந்தப் பகுதி, சுனாமியின்போது மிகவும் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் பறிபோக‌ நேர்ந்தது. கிழக்கு கடற்கரை சாலையருகே அமைந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு முதியவர் மற்றும் குழந்தையின் ஆவி சுற்றுவதாக அருகில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள். இதன் காரணமாக இந்த இடத்தில் யாரும் தங்குவதில்லை. இந்த இடத்தில் இருக்கும் ஒரு கோவிலில், ரத்தக் கறைகள் இருப்பதாகவும் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

இங்கிருக்கும் ஒரு வீட்டில், தற்கொலை செய்து கொண்ட‌ ஒரு பெண்ணின் ஆவி இருப்பதாக நம்புகிறார்கள். கூகுள் வரை தெரிந்திருக்கிறது. கூகுள் மேப்பில், இந்த வீட்டைப் பேய் வீடாக‌ காட்டுகிறது. இந்த வீட்டை கடக்கும்போது, கதவு அடித்துக் கொள்வதும், மொபைல் சிக்னல் கட் ஆவதும், கூச்சல்கள் கேட்பதும் பலரைத் தெறிக்க விடுகிறது.


No:4 பெசன்ட் அவென்யூ ரோடு, சென்னை



சென்னையில் அமைந்துள்ள இந்த சாலையில், பகல் நேரங்களில் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் நள்ளிரவு நேரங்களில் அமானுஷ்யங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளை பேய் அறைவதாக நம்பப்பட்டு வருகிறது.

No:5 கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), சென்னை



சென்னை மக்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் பலருக்கும் தெரிந்த சாலை இசிஆர். சென்னை-புதுச்சேரியை இணைக்கும் முக்கியமான சாலைதான் இசிஆர். கேளிக்கை, கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் பேயை பார்த்திருப்பதாக வாகன ஓட்டிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

No:6 ப்ளூ கிராஸ் ரோடு, சென்னை



சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பெசண்ட் நகர் அருகே ப்ளூ கிராஸ் ரோடு அமைந்துள்ளது. ஒரே ஒரு லேன் கொண்ட இந்த சாலை முழுவதும் வனாந்திரம் போல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த சாலையில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே அவர்களின் ஆவி இன்னமும் அங்கே உலாவி கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். எனவே இரவு நேரங்களில் ப்ளூ கிராஸ் சாலையில் செல்வது ஆபத்தானது என்பது அப்பகுதி மக்களின் கருத்து. இரவு நேரங்களில் யாரும் அங்கு செல்ல வேண்டாம் எனவும் மற்றவர்களை அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்.



Post a Comment

0 Comments