Ticker

10/recent/ticker-posts

பேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா? யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்?

 

பேய்கள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக நீண்டு கொண்டு இருக்கிறது. ஏனெனில் இந்த உலகமும் அதிலிருக்கும் ரகசியங்களும் மனிதனின் மூளைக்கு அப்பாற்பட்டது. அப்படி மனிதனின் மூளைக்கு அப்பாற்பட்ட ரகசியங்களில் ஒன்றுதான் பேய் ஆகும்.


பேயை பார்த்தேன் என்று பலரும் கூறுவதுண்டு, ஆனால் மனிதர்கள் கண்டறிந்த வரையில் பேய்களின் இருப்பை உணர முடியுமே தவிர அவற்றை மனிதர்களால் பார்க்க இயலாது. அதையும் மீறி நாம் பேயை பார்ப்பது போல தோன்றுவது எல்லாம் நம் மூளையில் பதிவாகியிருக்கும் காட்சிகள் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான். இந்த பதிவில் பேய்களை ஏன் கண்களால் பார்க்க இயலாது என்று பார்க்கலாம்.

ஆவிகள் 
ஆவிகள் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்பட தொடங்கிவிடுவார்கள், ஆனால் அனைத்து ஆவிகளும் எதிர்மறையானவை அல்ல. நம்மை சுற்றி பெரும்பாலான நல்ல ஆன்மாக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது,நாம் அவர்களை தொந்தரவு செய்யாத வரை அவை நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடாது.

அதிக உணர்திறன் 
அதிக உணர்திறன் கொண்ட சிலர் தங்களை சுற்றி ஆன்மாக்கள் இருப்பதை உணர்வதாகவும், சில பார்ப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பலரும் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இது உங்களின் உள்ளாற்றல் மற்றும் சக்கரங்களில்தான் உள்ளது.

ஒருவர் எப்படி ஆன்மாவாக மாறுகிறார்? 
ஒருவர் இறக்கும் போது அவரின் உடல் மட்டும் அழிகிறது, அவர்களின் இறுதிச்சடங்கு சரியான முறையில் நடந்திருந்தால் அவர்களின் ஆன்மா இவ்வுலக வாழ்வில் இருந்து விடுவிக்கப்படுகிறது. ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தாலோ அல்லது தற்கொலை செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது இயற்கைக்கு மாறான முறையிலோ மரணம் அடைந்திருந்தால் அவர்கள் ஆன்மாவாக அலைய வாய்ப்புள்ளது.

நம்மால் ஏன் பார்க்க முடிவதில்லை? 

நமது உடல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. நாம் உயிருடன் இருக்கும்போது நிலம் மற்றும் நீரை சார்ந்து இருக்கிறோம், ஆனால் ஆன்மாக்கள் காற்று என்னும் ஒரு மூலக்கூறால் மட்டுமே ஆனவை. அதனால்தான் அவற்றை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை.

அவற்றின் இடம் 
பொதுவாக ஆன்மாக்கள், அவை நல்ல ஆன்மாவாக இருந்தாலும் சரி, தீய ஆன்மாவாக இருந்தாலும் சரி அவை எதிர்மறை இடங்களில்தான் காணப்படும். இதனால்தான் நமது சுற்றுப்புறத்தை எப்பொழுதும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. எதிர்மறை இடங்கள் ஆன்மாக்களை எளிதில் ஈர்க்கும்.

பேய் உடல் 
மனிதர்களுக்கு பேய் பிடிக்கும் என்பது பழங்காலம் முதலே இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். பேய் பிடித்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு குறைவான அறிகுறிகளே உள்ளது. அவர்கள் எப்பொழுதும் அகலமாக திறந்திருக்கும், மேலும் சிவப்பாக இருக்கும். அவர்கள் எப்பொழுதும் மூர்க்கத்தனமாக இருப்பார்கள், ஒன்று மிக அதிகமாக சாப்பிடுவார்கள் அல்லது மிக குறைவாக சாப்பிடுவார்கள். அதிக நேரம் தூங்குபவர்களாக இருப்பார்கள்.

யாரெல்லாம் உணர முடியும்? 
மற்றவர்களால் தனிமைப்படுத்த பட்டவர்கள் அல்லது விரும்பி தனிமையை ஏற்றவர்கள் அதேசமயம் எப்பொழுதும் மனஅழுத்ததில் இருப்பவர்கள் போன்றவர்களால் ஆன்மாக்களின் இருப்பை உணர முடியும்.

நன்கு தெரிந்தவர்கள் 
பொதுவாக மூடிய இடங்களில் உங்கள் அலுவலகம், வீடு போன்ற இடங்களில் ஆன்மாக்களின் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் அவர்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவோ அல்லது உங்களை ரொம்ப விரும்பியவர்களாகவோ இருப்பார்கள். உங்களை சுற்றி ஆண்மாக்கள் இருக்கும் போது அந்த அறையின் வெப்பநிலையை வைத்தே நீங்கள் அதனை அறியலாம். ஆன்மாக்கள் இருக்கும் அறையில் திடீரென வெப்பநிலை குறைந்துவிடும்.

அறிவியல் விளக்கம் 
சிலசமயம் ஆன்மாக்கள் நம் கற்பனையால் உருவானதாகக் கூட இருக்கலாம். அதற்கு காரணம் நமது மனஅழுத்தம், பூமியின் மின்காந்த விளைவு என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த பிரபஞ்சம் பல்வேறு விதமான அதிர்வுகளை வெளியீட்டுக்கு கொண்டேதான் இருக்கிறது. வெளியுலகில் இருந்து வரும் அதிர்வுகளை உங்களால் பெற முடிந்தால் உங்களுக்கு பேய்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கலாம்.

யாரெல்லாம் பார்க்க முடியும்? 

பொதுவாக தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை பயணத்தில் கழிப்பவர்கள் பேய்களை பார்க்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள அதிர்வுகளை பெற்றிருப்பார்கள். மிகவும் நெருக்கமானவர்கள், வாழ்க்கைத்துணை, சில அபூர்வசக்தி கொண்ட மனிதர்கள் போன்றவர்களால் ஆன்மாக்களை உணரவோ அல்லது பார்க்கவோ முடியும்.



Post a Comment

0 Comments