Ticker

10/recent/ticker-posts

Intresting Facts around the world

facts in tamil

உலக அரங்கில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் கண்டு நாள்தோறும் அதிசயத்து கொண்டு வருகிறோம். அப்படியாக உங்களை ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.



1.    North Korea மற்றும் Cuba நாட்டில் நீங்கள் coco-cola வாங்க முடியாது :

Coco-cola குளிர்பானத்தை உலகில் பல இடங்களில் நீங்கள் வாங்க முடியும். ஆனால் North Korea மற்றும் Cuba நாட்டில் உங்களால் இந்த குளிர்பானத்தை வாங்க முடியாது என்பது Bbc அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதற்கு காரணமாக பார்க்கபடுவது அமெரிக்கா இந்த நாடுகள் மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக பார்க்கபடுகிறது.

2.    உலகில் மிக அமைதியான அறை Microsoft-ல் உள்ளது:



அமைதி என்பதனை யாராலும் அவ்வளவு எளிதாக பெற முடியாது. எங்கு பார்த்தாலும் வாகன சத்தம், பாட்டு சத்தம் என இருந்து கொண்டே இருக்கும். ஆனால் Microsoft தலைமையகத்தில் உள்ள அறை ஒன்றில் உலகிலேயே மிகவும் அமைதியான அறை ஒன்று உள்ளது. அந்த அறையில் -20.35 decibels அளவில் தான் நம்மால் சத்தம் உணர முடியும் என கூறப்படுகிறது.

3.    உலகில் ஒவ்வொரு நொடிக்கும் 4 குழந்தைகள் பிறக்கின்றன:

ஆச்சரியமாக நடக்கும் பல விஷயங்கள் மனிதர்கள் பிறப்பும் அடங்கி உள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்று பார்த்தால் உலகில் ஒவ்வொரு நொடிக்கும் 4 குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி பிறப்பதை வைத்து சிறு கணக்கு ஒன்று போட்டால் ஒரு நிமிடத்திற்கு 250 குழந்தைகளும், 15,000 குழந்தைகள் ஒரு மணி நேரத்திலும், 360000 குழந்தைகள் ஒரு நாளிலும் பிறக்கின்றன. நீங்கள் இதனை படிக்கும் நேரத்திலும் கூட பல குழந்தைகள் பிறந்திருப்பன.

4.    South Sudan மிகவும் youngest நாடாக உள்ளது:

உலக வரலாற்றில் பல நாடுகளின் பக்கங்களை திரும்பி பார்த்தால் அவை பல நூற்றாண்டு முன்னதாக நம்மை கொண்டு செல்லும் ஆனால் South Sudan அப்படி இல்லை. அதற்கு காரணம் south Sudan நாடு 2011 ஆண்டு தான் Sudan நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன் காரணமாக உலகின் மிகவும் youngest country என கூறப்படுகிறது.

5.    உலக மக்கள் தொகையை நொடிக்கு நொடிக்கு update கொடுக்கும் Website;

அட ஆமாங்க இந்த உலகில் நொடிக்கு நொடிக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன. எத்தனை பேர் இறக்கின்றனர் என்பது குறித்தும், எந்த நாட்டில் எத்தனை பேர் பிறக்கின்றனர், எத்தனை பேர் இறக்கின்றனர் போன்ற தகவல்களை World population meter என்ற வலைத்தளத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

6.    ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறக்கின்றனர்;

எப்படி ஒவ்வொரு நொடிக்கும் 4 குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நாம் பார்த்தோமோ அதைபோல ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இந்த உலகில் இறக்கின்றனர். அதனை கணக்கிட்டு பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு 105 பேரும் , 6316 பேர் ஒரு மணி நேரத்திற்கும், 151600 பேரும், ஒரு வருடத்திற்கு 55.3 பேரும் இறக்கின்றனர்.

7.    உலகில் உள்ள எறும்புகள் ஒன்று சேர்ந்தால் மனிதர்களின் அளவு எடை வருமாம்.

அட ஆமாங்க உலகில் மனிதர்களின் எண்ணிக்கை 8 பில்லியன் அளவை எட்டவில்லை ஆனால் எறும்புகளின் எண்ணிக்கை 10 Quadrillian அளவை எட்டியுள்ளது. இது குறித்து விலங்கியல் நிபுனர் chris Packham 2014  போது பிபிசியில் கூறும்போது அனைத்து எறும்புகளின் எடையை ஒன்று சேர்த்தால் அனைத்து மனிதர்களின் எடைக்கு நிகராக இருக்குமாம்.

 


Post a Comment

0 Comments